காளிதேவியின் அருள்பெற்ற மகாகவி காளிதாசர் எழுதிய சியாமளா தேவியைப் போற்றுகின்ற துதி ஸ்ரீசியாமளா தண்டகம். இருப்பத்தாறுக்கும் மேலான எழுத்துக்களைக் கொண்ட பத்திகளை உடைய கவிதையான தண்டகம் ஏறத்தாழ உரைநடை போலவே தோன்றும்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் வலப்புறம் வீற்று மந்திரியாக விளங்கும் மந்த்ரிணி சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். இவள் பிரம்மதேவனின் மானச புத்திரர்களில் ஒருவரான மதங்கமுனிவரின் மகள்; மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள். உஜ்ஜயினியில் இந்த தேவியை வணங்கியே மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதால் கதம்பவனவாஸினீ என்றும் நாமம் பெற்றவள்.
கீழ்கண்ட காணொலியில் சரியான உச்சரிப்புடன் சியாமளா தண்டகத்தை எப்படி ஓத வேண்டும் என்று கற்கவும்.
டாக்டர் சுதா சேஷய்யன் அளிக்கும் உரை கேட்க
ध्यानम्
ராகம் : பிலஹரி
माणिक्यवीणामुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् । माहेन्द्रनीलद्युतिकोमलाङ्गीं मातङ्गकन्यां मनसा स्मरामि ॥ १ ॥
மாணிக்கக் கற்கள் இழைத்த வீணையை மடியில் வைத்து தடவிக் கொடுப்பவளும், பேரின்பத்தில் திளைப்பதால் சுறுசுறுப்பற்றவளும், இனிய சொல்லெழில் பெற்றவளும், மகேந்திர நீலமணியின் ஒளி வாய்ந்த மெல்லிய மேனி உடையவளும், மதங்க முனிவரின் திருமகளுமான தேவியை மனத்தால் நினைக்கிறேன்.
I meditate on the daughter of Matanga, Who plays the veena that is studded with precious ruby stones, Who has become indolent due to her being absorbed in divine ecstasy, Who is blessed with very sweet words, who has a radiant complexion that shines like the blue gem. (madalasaam- Looking relaxed and languid due to being immersed in spiritual ecstasy/exhilaration.)
ராகம் : ஷண்முகப்ரியா
चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमराग शोणे | पुण्ड्रेक्षुपाशाङ्कुश पुष्पबाण--हस्ते नमस्ते जगदेकमातः ||२ ||
My salutations to that mother of universe, Who has four hands, Who wears the crescent as an ornament, Who has very high breasts, Who is of the colour of saffron, And who holds flower, sugar cane, rope, arrow, The goad and white lotus in her hands.
நான்கு கைகள் உடையவளே! பிறை நிலவைத் தலையில் ஆரபணமாகச் சூடியவளே! உயர்ந்த கொங்கைகள் கொண்டவளே! குங்குமப் பூச்சால் சிவந்தவளே! கரும்பு வில், பாசம், அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளே! உலகின் ஒரே தாயே! உன்னை வணங்குகிறேன்.
ராகம் : அடாணா
माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी । कुर्यात्कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३ ॥
மரகதம் போல் கரிய நிறத்தினளும், மதங்க முனிவரின் மகளும் மதம் நிறைந்தவளும், மங்கள ரூபிணியும், கதம்பவனத்தில் உறைபவளும், அன்னை வடிவினளுமாகிய தேவி கடைக் கண்ணால் என்னைப் பார்த்தருள்வாளாக.
ராகம் : நீலாம்பரி
जय मातङ्गतनये जय नीलोत्पलद्युते । जय सङ्गीतरसिके जय लीलाशुकप्रिये ॥ ४ ॥
மதங்கரின் மகளே போற்றி! நீலோத்பல மலரின் ஒளி பெற்றவளே, போற்றி! இனிய இசையை ரசிப்பவளே, போற்றி! கொஞ்சும் கிளியிடம் மகிழ்பவளே போற்றி!
இந்த பதிவிலும் பின்வரும் பதிவிலும் சியாமளா தண்டகத்தை எப்படி சரியான உச்சரிப்புடன் பாடுவது என்பதை Bhaskara Prakasha Ashram குழுவினர் கற்றுக் கொடுக்கிறார்கள். கற்றுக்கொள்ள வசதியாக அவர்கள் உரைநடையை இரண்டு முறை ஓதி ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை பாடுகிறார்கள்.