top of page

Learn Shyamala Dandakam - Part 2

दण्डकम्


Ragam : Gambhira Nattai

जय जननि सुधा समुद्रान्तरुद्यन् मणिद्वीप संरूढ बिल्वाटवीमध्यकल्पद्रुमाकल्प कादम्बकान्तार वासप्रिये कृत्तिवासःप्रिये सर्वलोकप्रिये ।

அமுதக் கடலின் நடுவே மனத்தைக் கவரும் மணித்தீவில் செழித்தோங்கிய வில்வக் காட்டின் நடுவில் கற்பக மரங்களை அணியாகக் கொண்ட கதம்பவனத்தில் வசிப்பதை விரும்புபவளே! யானைத்தோல் உடுத்திய சிவபெருமானின் துணைவியே! எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவளே தாயே, போற்றி!


सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रमालोल नीपस्रगाबद्धचूली सनाथत्रिके सानुमत्पुत्रिके ।

மலைமகளே! பக்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட இசையை ஆமோதிப்பதற்காகத் தலையை அசைக்கும்போது, கூந்தலில் அணிந்துள்ள கதம்ப மாலை பின்கழுத்தில் மென்மையாக அசைகின்ற கழுத்தை உடையவளே!


शेखरीभूत शीतांशुरेखा मयूखावली बद्ध सुस्निग्ध नीलालकश्रेणिशृङ्गारिते लोकसम्भाविते ।

தலையணியாக அமைந்த பிறை நிலவின் கதிர்க் கற்றையால் அழகுற்று விளங்கும் கரிய கூந்தலை உடையவளே! உலகோரால் வழிபடப் படுபவளே!


कामलीला धनुःसन्निभ भ्रूलतापुष्प सन्दोह सन्देह कृल्लोचने वाक्सुधा सेचने ।

மன்மதனின் கேளிக்கைகளுக்கான வில்லை ஒத்த புருவக்கொடியில் மலர்ந்த மலர்க் கொத்து தானோ என்ற சந்தேகம் கொள்ளச் செய்கின்ற விழிகளை உடையவளே! சொல்லமுதால் அன்பர்களை நனைப்பவளே! 


चारु गोरोचना पङ्क केलील लामाभिरामे सुरामे रमे ।

சிறந்த கோரோசனைக் கலவையால் பொட்டிட்டு அழகுடன் மிளிர்பவளே! மனத்தைக் களிப்புறச் செய்பவளே மகாலட்சுமித் தாயே!

प्रोल्लसद्वालिका मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्यगण्डस्थल न्यस्त कस्तूरिकापत्ररेखा समुद्भूत सौरभ्य सम्भ्रान्त भृङ्गाङ्गना गीत सान्द्रीभवन्मन्त्र तन्त्रीस्वरे सुस्वरे भास्वरे ।

நன்றாக ஒளி வீசும் வாளி என்ற தோட்டிலுள்ள முத்து வரிசைகளின் ஒளிக்கற்றையால் உனது கன்னப்புறங்கள் ஒளி பெற்றுத் திகழ்கின்றன. அந்த அழகிய கன்னங்களின்மீது கஸ்தூரியால் தீட்டப்பட்ட சித்திரங்களிலிருந்து எழுந்த மணத்தில் மயங்கிய பெண் வண்டுகளின் ரீங்கார இசையால் ஒத்து ஓதப்படும். யாழின் மந்திர ஒலியைப் போன்ற குரல் உடையவளே! இனிய குரல் வாய்ந்தவளே! ஒளி பொருந்தியவேள!


वल्लकी वादन प्रक्रिया लोल तालीदलाबद्ध ताटङ्क भूषाविशेषान्विते सिद्धसम्मानिते ।

யாழின் இசைக்கேற்ப அசைந்தாடுவதும், பனையோலையால் செய்யப்பட்டதுமான காதணியை அணிந்தவளே! சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே!दिव्य हालामदोद्वेल हेलालसच्चक्षुरान्दोलन श्रीसमाक्षिप्त कर्णैक नीलोत्पले पूरिताशेष लोकाभिवाञ्छा फले श्रीफले ।

தெய்வீக போதை மயக்கத்தால் விளையாட்டாய்ச் சுழலும் விழிகளின் ஒளியழகால் வெல்லப்பட்ட அழகுடைய குவளை மலரைக் காதில் அணிபவளே! சியாமளா தேவியே உலகோரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! செல்வத்தைத் தருபவளே!


स्वेद बिन्दूल्लसत् फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिका मौक्तिके सर्वविश्वात्मिके कालिके ।

வேர்வைத் துளிகள் திகழும் நெற்றியை உடையவளே! எழில் மழையின் துளிகளோ என்று சந்தேகப்படச் செய்கின்ற முத்துக்களாலான மூக்குத்தியை அணிந்தவளே! அனைத்துலக உருவினளே காளி தேவியே! निष्यन्द = shower; फाल = forehead;


मुग्ध मन्दस्मितोदार वक्त्रस्फुरत्पूग ताम्बूल कर्पूर खण्डोत्करे ज्ञान मुद्राकरे सर्वसम्पत्करे पद्मभास्वत्करे ।

திருவாயில் பச்சைக் கர்ப்பூரத்துடன் வெற்றிலை பாக்கு தரித்தவளே! சின்முத்திரை மிளிரும் கரத்தினளே! எல்லாச் செல்வங்களையும் தருபவளே! தாமரைபோல் ஒளிரும் திருக்கரத்தினளே!


कुन्दपुष्पद्युति स्निग्ध दन्तावली निर्मला लोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे चारुवीणाधरे पक्वबिम्बाधरे

முல்லை மலர்களைப்போல் ஒளிசிந்தும் அழகிய பற்களின் மாசற்ற ஒளித்திரளால் அழகுற்ற சிவந்த கீழுதட்டை உடையவளே! அழகிய வீணையைத் தாங்குபவளே! பழுத்த கோவைப் பழம் போன்ற உதட்டை உடையவளே!


2 views0 comments
bottom of page