மன்மதன் யார்?
Updated: Oct 19, 2022
‘மன்மதன்’ என்றால் ‘மனதை கடைபவன்’ என்று அர்த்தம். ‘மதனம்’ என்றால் கடைவது. மனதை மதனம் பண்ணுபவன் மன்மதன். காதல் வயப்பட்ட ஒருவரின் மனதை அது கடைந்து படாதபாடு படுத்துவதால் இந்த காரண பெயர்! ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே பிரபஞ்சமாக உருவானது. காம தகனம்
சூராதி அவுணர்களை அழிக்கவல்ல ஒரு மகனை சிவ பெருமான் தேவர்களுக்கு அளிக்க வேண்டுமானால் அவர் நிஷ்டையிலிருந்து எழவேண்டும். அதை நடை முறை படுத்துவதற்கு தேவர்கள் பிரம்மாவை நாடினார்கள். அவர்கள் திட்டத்தை கேட்டு தயங்கிய மன்மதனை பிரம்மா மசிய வைத்தார். பிறகு எல்லோரும் கைலாயம் சென்றனர்.
சிவ பெருமான் உத்தரவு படி அவரை காண வந்த மன்மதனை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் . சென்றவுடன் அவன் யோக நிலையிலுள்ள சிவன் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்து பார்வதி அன்னை பற்றி ஆசை எண்ணமும் இமைப்பொழுது தோன்றியது. கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின் நடந்த நிகழ்வுகளை ஞான திருஷ்டியால் அறிந்து, உலக நன்மைக்காக பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி அழுது புலம்பவே ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் அனங்கனாகவும் இருக்கும்படி வரமருளினார்.
அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள். உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் மனைவியரிடத்தே அன்புடன் கூடிய அக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம். சிவன் எரித்தது காம வெறியைத் தான்; உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று. மோட்சத்தை அடைய ஈசனை வேண்டுவோர் முதலில் ஒழிக்க வேண்டியது காமமே.
சிவ பெருமான் உத்தரவு படி அவரை காண வந்த மன்மதனை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் . சென்றவுடன் அவன் யோக நிலையிலுள்ள சிவன் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்து பார்வதி அன்னை பற்றி ஆசை எண்ணமும் இமைப்பொழுது தோன்றியது. கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின் நடந்த நிகழ்வுகளை ஞான திருஷ்டியால் அறிந்து, உலக நன்மைக்காக பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி அழுது புலம்பவே ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் அனங்கனாகவும் இருக்கும்படி வரமருளினார். அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள். உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் மனைவியரிடத்தே அன்புடன் கூடிய அக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம். சிவன் எரித்தது காம வெறியைத் தான்; உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று. மோட்சத்தை அடைய ஈசனை வேண்டுவோர் முதலில் ஒழிக்க வேண்டியது காமமே.
மன்மதனுடைய தேர் தென்றல். தேரை இழுப்பது கிளி! கரும்பு வில். தாமரை, மல்லிகை, கருங்குவளை (நீலோத்பலம்), மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் மன்மதனுடைய அம்புகள். நாணோ புஷ்பங்களில் ரீங்காரமிடும் வண்டுகள். பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை தன்மாத்ரை எனப்படும். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் - அது எப்போதும் ரீங்காரம் செய்வது. பஞ்ச தன்மாத்ரைகளில் புஷ்பத்துக்கு இல்லாத சப்தம் ஒன்றையும் அது பூர்த்தி பண்ணிவிடும்!
ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பதென்றால் அந்த பாணத்தைத் தொடுத்துப் பிரயோகிப்பதற்கு ஆதாரமாகவுள்ளது கரும்பு வில்லாகியதும் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.
மன்மதனுக்கு தன் அழகிலே அஹம்பாவம் இருந்தது. தேவர்கள் சிவபெருமானிடம் ச்ருங்கார எண்ணத்தை உண்டாக்கச் சொன்னவுடன் 'நாம் பரமேச்வரன் மனஸையே கலக்கி ஜயிக்கக்கூடிய மஹாசக்திமானா?' என்ற அஹம்பாவமும் அவனுக்குச் சேர்ந்தது. இந்த சக்தியை தனக்கு அளித்ததே சிவன் என்று மறந்தான்.
இதே போல தான் திரிபுர ஸம்ஹார காலத்தில் பரமேச்வரனுக்கு ரொம்ப பலமான, சக்தி வாய்ந்த மேரு தநுஸ்; வாஸுகி நாண்; மஹாவிஷ்ணு அம்பு; ஸூர்ய சந்திரர்கள் ரத சக்ரம்; பூமி தேர்த்தட்டு; ஸாரதியாக ப்ரம்மா என்று ஒரு கூட்டணி சேர்ந்தது. இருந்தும் இவைகளை பயன் படுத்தாமலே சிவன் ஒரு புன்னகையால் திரிபுரத்தை எரித்தார்.