top of page

ராம சரித கீதம் - 11

Writer: Uma ShankariUma Shankari

Updated: Dec 13, 2024

The last instalment of Rama charita Geetam is here. For those interested in getting the swaras and chittaswarams, please click the downloadable pdf link here.


சரணம் 20 : ராகம் - மணிரங்கு

சகல தேவர்களும் ப்ரம்மனும் இந்திரனும்

சந்திர சூரியரும் சங்கரனும் தன் தந்தை

தசரதனும் வான் நிறைந்து நின்று

தடை செய்தும் சீதையை

தீயில் குளிக்கச் செய்த

தாரக ப்ரஹ்மத்தை நர வேஷதாரியைக்- (கோசலை)


சரணம் 21 : ராகம் - ப்ருந்தாவனஸாரங்கா

புடமிட்ட தங்க விக்ரஹம் போல் வெளிப்பட்ட

பூமி மகளுடன் புஷ்பகம் தனில் ஏறி

புடை சூழ்ந்த லக்ஷ்மணன் விபீஷணன்

சுக்ரீவன் ஹனுமன் அளவளாவ (கோசலை)


சரணம் 22 : ராகம் - சுருட்டி

பரதனை நினைத் துள்ளம் நடுங்கினார்

பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைந்தார்

பரதனிடம் ஆஞ்சனேயனை அனுப்பின (கோசலை)


சரணம் 23 : ராகம் - மத்யமாவதி

சகல உலகும் கோலாஹலமுடன்

பரதன் வந்தெதிர் கொள

அன்னையர் மூவரும் தவமுனி வசிஷ்டராதியர்

மகுடாபிஷேகம் செய்ய விளங்கும் பட்டாபி ராமனைக்- (கோசலை)


திருமதி பூமா கிருஷ்ணன் பாடிய ஒலிப்பதிவுகள் கீழே காணவும்.

ராகம் மணிரங்கு



ராகம் ப்ருந்தாவனஸாரங்கா + சுருட்டி



ராகம் மத்தியமாவதி



©2022 by Tiruppugazh Nectar.

bottom of page