ராம சரித கீதம் - பகுதி 4
- Uma Shankari
- Mar 20, 2024
- 1 min read
Updated: Mar 23, 2024
சரணம் 06 : ராகம் - வஸந்தா
குஹனெனும் பரம பாகவதன் உள்ளம்
குளிரப் புன்னகை தவழ் முகமுடன்
அவன் துணை கொண்டுயர் கங்கை நதி கடந்து
சித்ரகூடக் குன்றத்தில் கோயில் கொண்ட ஸ்ரீ (கோசலை)
சரணம் 07 : ராகம் - தோடி
மாமன் மனையில் தங்கும் பரதன் வசிஷ்ட
மாமுனி ஆணையில் அயோத்தி நகரம் வந்தடைந்தான்
நடந்தவை கண்டு மனம் உடைந்தான்
உடலும் உயிரும் துடி துடித்து
தந்தையை தாயை குருவை நிந்தனை செய்தான்
தனக்குரிய தந்தையின் கடன் முடித்தான்
தவக் கோலமுடன் தமையனைக்
காண விரைந்து புறப்பட்டான் (கோசலை)
சிட்டாஸ்வரம்
ஸ ரி ஸ நி த ம க ம - த நி த ம க ரி ஸ நி |
ஸ ரி க ம த ம க ம | த நி ஸ ரி க ம க ரி ||
க ரி ஸ - நி த ம - க ரி ஸ - ரி க ம த நி ஸ ரி |
ஸ - க ஸ நி ப ம நி ப | ம க ஸ - ஸ க ம ப நி ||
SRSN DMGM DNDM GRSN
SRGM DMGM DNSR GMGR
GRS - NDM - GRS - RGM DNSR
S - GSNPM - NPMGS - SGMPN
The following audios have been taken from Bhavani's music Channel on Youtube (https://www.youtube.com/@bhavanismusic5036)
The following audios are the work of Dr. Bhuma Krishnan, my teacher and a resident of Toronto, Canada
Charanam 6
Charanam 7
Comentários