top of page

Shyamala Dandakam Part 5

Updated: 2 days ago

Ragam Varali


सुरुचिर नवरत्न पीठस्थिते सुस्थिते ।

பேரெழில் பொலிகின்ற நவரத்தினங்கள் இழைத்த பீடத்தில் வீற்றிருப்பவளே! சிறப்பாக அமர்ந்தருள்பவளே!

Who sits in the seat made of the nine precious gems, Who sits majestically,


रत्नपद्मासने रत्नसिंहासने शङ्खपद्मद्वयोपाश्रिते । विश्रुते

ரத்தினக் கற்களால் அமைந்த தாமரை மலராசனத்தில் வீற்றிருப்பவளே! ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருள்பவளே! சங்க நிதி, பத்ம நிதி என்ற இரண்டு பெரும் செல்வங்களாலும் சேவிக்கப்படுபவளே! புகழ் வாய்ந்தவளே!

Who sits on the jeweled lotus flower, Who sits on the jeweled throne, who is served by the shankha and padma nidhis (guardian gods that protect the wealth of deities in Hindu temples), Who is very famous,


तत्र विघ्नेश दुर्गा वटु क्षेत्रपालैर्युते । मत्तमातङ्ग कन्यासमूहान्विते

அங்கே விநாயகர், துர்க்கா தேவி, வடுகர், க்ஷேத்ர பாலர் ஆகியோருடன் எழுந்தருள்பவளே! உல்லாசமாகத் திரிகின்ற மாதங்கன்னிகளால் சூழப்படுபவளே!

Who is accompanied by Ganesha, Durga, Vatu and Kshetrapala, who has the company of intoxicated matanga kanyas


मञ्जुला मेनकाद्यङ्गना (मेनका आदि अंगना ) मानिते भैरवैर् अष्टभिर्वेष्टिते । देवि वामादिभिः शक्तिभिः सेविते । धात्रि लक्ष्म्यादि शक्त्यष्टकैः सम्युते । मातृका मण्डलैर्मण्डिते । यक्ष गन्धर्व सिद्धाङ्गना मण्डलैरर्चिते ।

மஞ்சுளா, மேனகா முதலிய அழகிய மங்கையரால் வணங்கப்படுபவளே! (अङ्गना = அழகிய அங்கங்களை உடைய பெண்) எட்டு பைரவர்களால் சூழப்படுபவளே! வாமை முதலான தேவியரால் சேவிக்கப்படுபவளே! ( धात्रि ) உலகிற்கு உணவளித்துக் காப்பவளே! மகாலட்சுமி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியிருப்பவளே! மாத்ருகா தேவியரால் சூழப்பட்டவளே! யட்சர், கந்தர்வர் மற்றும் சித்தர்களின் மனைவியரால் பூஜிக்கப் படுபவளே!

Who is honoured by Manjula, Menaka and other celestial damsels; Who is surrounded by the eight bhairavas; Who is served by saktis like Vama, and also eight saktis of Dhatri, Lakshmi and others; Who is worshipped by the seven mothers, yakshas, gandharvas and the siddhanganas,


भैरवि संवृते पञ्चबाणात्मिके । पञ्चबाणेन रत्या च सम्भाविते । प्रीतिभाजा वसन्तेन चानन्दिते ।

பைரவிகளால் சூழப்பட்டவளே! பஞ்ச பாணங்களை உடையவளே! மன்மதனாலும் ரதியாலும் வணங்கப்படுபவளே! அன்புடையவனாகிய வசந்த கால தேவனால் மகிழ்பவளே!

Who is surrounded by bhairavies, who is the very soul of Kama, Who is honoured by Kama and Rati and who is propitiated by Vasanta who enjoys her affection.


भक्तिभाजां परं श्रेयसे कल्पसे । योगिनां मानसे द्योतसे । छन्दसा मोजसा भ्राजसे । गीतविद्या विनोदाति तृष्णेन कृष्णेन सम्पूज्यसे ।

நீ பக்தியுடன் பணிபவர்களுக்கு மேலான செல்வத்தை அளிக்கிறாய். யோகிகளின் மனத்தில் ஒளிர்கிறாய்! சக்தி வாய்ந்த வேத மந்திரங்களால் பிரகாசிக்கிறாய்! ஆடல், பாடல், கல்வி, குறும்பு இவற்றில் விருப்பம் கொண்ட கிருஷ்ணனால் சிறப்பாக வழிபடப்படுகிறாய்!

You bless your devotees with material and spiritual welfare. You shine in the hearts of yogis. You shine by the powerful Vedic chants. You are worshipped by Krishna who very much likes gitavidya( the fine art of music). Brahma sings your praises with deep devotion. Vidyadharas sing your glories with instruments which captivate the hearts of all. 



भक्तिमच्चेतसा वेधसा स्तूयसे । विश्वहृद्येन वाद्येन विद्याधरैर्गीयसे ।

பக்தி நிறைந்த மனத்துடன் பிரம்ம தேவனால் துதிக்கப்படுகிறாய்! உலகைக் களிக்கச் செய்கின்ற வாத்தியங்களை வாசித்து வித்யாதரர்களால் போற்றப்படுகிறாய்!

Brahma sings your praises with deep devotion. Vidyadharas sing your glories with instruments which captivate the hearts of all. 





2 views0 comments
bottom of page