top of page

இராமாயணம் : அருணாசல கவிராயர் க்ருதி

Updated: Feb 29

பாபநாசம் சிவனின் க்ருதியான எனக்குன் இரு பதம் ராமாயணக் கதையை சுருக்கமாக கூறுகிறது. ஜனவரி 22 ம் தேதி ராம் மந்திர் மூலவரின் பிராண பிரதிஷ்டை நடக்கவிருக்கும் இத்தருணத்தில் சில எளிய பாடல்களைக் கற்றுக் கொள்வோம். கீழே காணுவது எம். எஸ். சுப்பலக்ஷ்மி பாடியது.





பல்லவி:  (ராகம்: கல்யாணி)

எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய்

ஸ்ரீ ராமசந்த்ரா எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய்


pallavi  (KalyaNi ragam)

enakkun irupadam ninaikka varamaruLvAi

shrI rAmacandrA enakkun irupadam ninaikka varamaruLvAi


சரணங்கள்

எனக்குன் இருபதம் நினைக்க வரமருள் இனித்த தசரதன் தனக்கு மகன் எனும் மனத்தினுடன் அவதரித்து முனிவரின் மகத்தில் அரக்கியை வதைத்த அரசே


charaNam

enakkun irupadam ninaikka varamaruL initta dasharathan tanakku maghan enum manattinuDan avatarittu munivaran maghattil arakkiyai vadaitta arasE


(ராகம்: பைரவி)

நடக்கையிலே அகலிகைக்கு க்ருபை செய்து நடத்தி ஜனகன் வில் ஒடித்து ஜானகி கை  பிடித்து பரசுராமனுக்கு மமதையைப் பிரித்து நகரில் வந்திருக்கும் அய்யனே


naDakkaiyilE ahaliyaikku krupai seidu naDattij-janakan vil oDittu jAnaki kai piDittu parashurAmanukkum mamataiyaip pirittu nagaril vandirukkum ayyanE


(ராகம்: கேதாரகௌள)

தரிக்கும் முடி பரதனுக்-குதவி நதித் தடத்தில் குஹனுடன் அடுத்து சித்ரகூட வரைக்குள் ஜானகியோடிருக்கத்-துணைவன் நல் வணக்கம் செய மகிழ் குணக்-குஞ்சரமே


tarikkum muDi bharatanuk-kudavi nathit tadattil guhanuDan aDuttu chitrakUTa varaikkuL jAnakiyODirukkat-tuNaivan nal vaNakkam saiya magizh gunak-kunjaramE


(ராகம்: தோடி)

துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர தொடுத்த மிதியடி கொடுத்தரசு செய்ய வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே வனத்தில் வரும் விராதனைக்  கொன்றவனே


tuDitta bharatanum oDukkamuDan vara toDutta midiyaDi koDuttarasu saiya vaDakkil avanaiyum viDuttu naDuvilE vanattil varum virATanaik-kondravanE


(ராகம்: மோஹனம்)

விடுக்கரிய  ஜடாயுவுக்-குறவு சொல்லி விடுத்துக் கொண்டு பஞ்சவடிக்கு சென்றவுடன்  அடுத்த சூர்ப்பனகை கொடுத்த கரதூஷணத் திரிசிரர்  முடி துணித்த ராகவா


viDukkariya jaTAyuvukk-kuravu solli viDuttuk-koNDu panchavaTikku sendravuDan aDutta sUrpaNakai koDutta kharadUShaNat tirishirar muDi tuNitta rAghavA


(ராகம்: தன்யாசி)

தனித்து வரு மாரீசனைக் கொன்றொரு கவந்தனுக்கு அருளி ஹநுமனைக் கொண்டொரு சுக்ரீவனுக்குதவி வாலி தனைப் பொருதி வானரப் படையை ஆதரித்த துரையே


tanittu varum arakkanaik-kondroru gavandanukku aruLi hanumanaik-koNDoru sugrIvanuk-kudavi vAli tanaip-poruthi  vAnarap-paDaiyai Adaritta duraiyE


(ராகம்: ஸஹானா)

இருக்கும் ஹனுமன் வந்துரைக்க நிசிசரர்  இருக்கை அறிந்த பின் எரித்த கடலிலே  பெருக்க அணை செய்து வருக்கம் வருக்கமா   பெலத்த அரக்கனைத்-தொலைத்த தெய்வமே


irukkum hanuman vanduraikka nishicharar irukkai arinda pin erittha kaDalilE perukka aNai seidu varukkam varukkamA pelatta arakkanait-tolaitta deivamE


(ராகம்: ஷண்முகப்ரியா)

கொடிய இந்த்ரஜித்தன் ப்ரஹஸ்தன் முதலாகக்- கொள்ளும் மூல பல வெள்ள அரக்கர் தம்  முடியும் கும்பகர்ணன் முடியும் ராவணன் முடியும் பொடியாக விடு புங்கவனே


koDiya indajitthan bhrahastan mudalAghak koLLum mUla bala veLLa arakkar tam muDiyumkumbhakarNan muDiyum rAvaNan muDiyum poDiyAga viDu pungavanE.


(ராகம்: மத்யமாவதி)

 நினைத்தபடி விபீஷணர்க்-கரசு பெற நிறுத்தி ஒரு புஷ்ப ரதத்தில் ஏறி வந்து தனத்தில் உயர் தரும் அயோத்தியிலே சிம்மாதனத்தில்-இருக்கும் ரகுகுலக்-குமரனே


ninaittapaDi vibhISaNark-karasu pera nirutti oru puSpa rathattil Eri vandu dhanattil uyar tarum ayOddhiyilE simmAdanattir-irukkum raghukulak-kumaranE

 

38 views1 comment

Recent Posts

See All
bottom of page