Composer : Madurai Srinivasan
Ragam : Sindhu Bhairavi
கருணை தெய்வமே
கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என்கருணை தெய்வமே கற்பகமே
உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை ... கற்பகமே)
சரணம்
ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்
அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை ... கற்பகமே)