top of page

ராம சரித கீதம் - பகுதி 5

சரணம் 08 : ராகம் - மோஹனம்


கடல் போல் அயோத்தி நகர் ஜனங்கள் பின் தொடர

வந்த பரதனைக் கண்டு லக்ஷ்மணன்

கருத்தில் வேறாய் பகை கொண்டான்

சிரித்து ராமன் புன்னகை கொண்டான்

அண்ணா அண்ணா என்று கண்ணீர் ஆறாய்ப் பெருக

அரற்றும் பரதனை வாரி அணைத்தான்

அன்னையருடன் அனைவர் மனமும் பாகாய் உருக

பரதன் அடி பணிந்து புலம்பினான் (கோசலை)


Listen to Dr. Bhuma Krishnan




சரணம் 09 : ராகம் - நாதநாமக்ரியா


ஆனை இருந்து அரசாளும் மண்டபத்தில்

பூனை இருந்து புலம்பித் தவிப்பது போல்

அரசாள நான் தரமோ அண்ணா இது

அறமோ இப்பொழுதே நகர் திரும்புவாய்


ராமன்

தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது

தகாது பிடிவாதம் நம்மிருவர் கடமை காண்

ஏழுடன் ஏழாண்டு உருண்டோடும்

உடன் வந்து உன்னுடன் கலந்து கொள்வேன்


பரதன்

அதுவரைக்கும் ஊருக்குள் புகமாட்டேன்

அதற்கு அடுத்த கணம் உயிர் வாழமாட்டேன்

உனது பாதுகை தந்தருள் போதும் அண்ணா

அது போதும் அண்ணா (கோசலை)

(அயோத்யா காண்டம் முடிவு)





19 views0 comments
bottom of page