நானொரு விளையாட்டு பொம்மையா
ராகம்: நவரச கானடா
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடினது போதாதா (தேவி)
( உந்தனுக்கு நானொரு )
அருளமுதை பருக அம்மா அம்மா
என்று அலறுவதை கேட்க ஆனந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திரு உள்ளம் இறங்காதா தேவி
( உந்தனுக்கு நானொரு )
Hear the following audio clip to listen to Maharajapuram Santanam singing the Kriti
The following video is provided by sapthaswara sangeethalaya