top of page

ராம சரித கீதம் - பகுதி 8

Updated: Mar 27

சரணம் 14 : ராகம் - காம்போதி

திசை எல்லாம் சீதையை வானரர்கள்

தேடிச் சென்றனர் கோடி கோடியாய்

தென் இலங்கையில் தேவி சீதையை

ஜய வீர ஹனுமன் கண்டான்

இரு கண் பயன் பிறவிப் பயனும் கொண்டான்

சீதாபதி தந்த மோதிரம் தந்தான்

திரும்பு முன் சீறி எழுந்து அசோகவனம் அழித்தான்

எதிர்த்த செல்லப்பிள்ளை அக்ஷயன் உயிர் குடித்தான் (கோசலை)


Lets learn the above lines from Dr. Bhuma Krishnan.




சரணம் 15 : ராகம் - சிம்ஹேந்த்ரமத்யமம்

விருப்பமுடன் அரக்கர் வேந்தன் எதிரில் நின்றான்

வியப்பும் வெறுப்பும் கொண்டான் வாயு குமாரன்

வாலில் நெருப்பை வைக்க அதனால் லங்கையை

சுட்டெரித்து தேவியிடம் விடை பெற்றுக்

கடல் கடந்து ராம சன்னதி அடைந்து அன்னையின்

சூடாமணி தரக் கொண்ட ஐயன் தழுவிக்கொண்டான் (கோசலை)

(சுந்தர காண்டம் முடிவு)


Once again, let's hear Dr. Bhuma Krishnan sing the above lines.



13 views0 comments
bottom of page