தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள் அவள். புகழ் பெற்ற லலிதா தேவியின் ஆயிரம் நாமங்கள் எட்டு வாக்தேவதைகளாகிய வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி அவர்களால் தேவியின் கட்டளையின் பேரில் உருவாக்கப்பட்டதனால் மிகவும் சக்தி வாய்ந்தவை.
லலிதா ஸஹஸ்ரநாமத்தை கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதன் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதன் அர்த்தங்களை முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு பிழையின்றி படிக்க வேண்டும் அல்லது ஸ்லோகமாக கூற வேண்டும். பாட வேண்டும் என்று ஆசை படுபவர்கள் இதற்கு பின்னரே பாட யத்தனிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
பல பாடகர்களும் பாடகிகளும் லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாடி இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட தேர்வு எம். எஸ். ஷீலா அவர்களின் ஒலிப்பதிவு தான். இதை பின் வரும் பகுதிகளில் பதிவிடுகிறேன். முதலில் உச்சரிப்புப் பிழையின்றி கற்றுக் கொள்ளலாம்.
Learn Lalitha Sahasranamam- Slow chant of Each name and Meaning- Part 1 of 5
श्रीललितासहस्रनामस्तोत्रम्
सिन्दूरारुणविग्रहां त्रिनयनां माणिक्यमौलिस्फुरत्
तारानायकशेखरां स्मितमुखीमापीनवक्षोरुहाम् ।
पाणिभ्यामलिपूर्णरत्नचषकं रक्तोत्पलं विभ्रतीं
सौम्यां रत्नघटस्थरक्तचरणां ध्यायेत्परामम्बिकाम् ॥
ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।
चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥
उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता ।
रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥
मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥
चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥
अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥
वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥
नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥
कदम्बमञ्जरी-कॢप्त-कर्णपूर-मनोहरा ।
ताटङ्क-युगली-भूत-तपनोडुप-मण्डला ॥ ८॥
पद्मराग-शिलादर्श-परिभावि-कपोलभूः ।
नवविद्रुम-बिम्बश्री-न्यक्कारि-रदनच्छदा ॥ ९॥ or दशनच्छदा
शुद्ध-विद्याङ्कुराकार-द्विजपङ्क्ति-द्वयोज्ज्वला ।
कर्पूर-वीटिकामोद-समाकर्षि-दिगन्तरा ॥ १०॥
Meaning
லலிதாம்பிகை சிவப்பு அல்லது தங்க நிறத்தில் சிவபெருமானுடன் இணைந்து பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் , ஈசானன் மற்றும் சதாசிவன் ஆகியோர் தாங்கிய தங்க பலகையிலான பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அவள் சிவப்பு நிற ஆடைகளும் செழுமையான நகைகளும் அணிந்திருக்கிறாள். அவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன, அதில் அவள் ஐந்து அம்புகளை வைத்திருக்கிறாள் - ஐந்து புலன்கள், ஒரு கயிறு - பற்றுதலைக் குறிக்கிறது, மற்றும் கரும்பு வில் - மனதைக் குறிக்கிறது.
Sri Mata | Sacred Mother -from whom all creatures are born |
Sri Maharajni | The Great Empress - sustains all the universe |
Srimat Simhasanesvari | Queen seated on a throne mounted on lions |
Chidagni-Kunda-Sambhuta | Born from the pit of fire of consciousness. அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள் |
Deva-Karya-Samudyata | Emerges for a divine purpose |
Udyad-banu-sahasrabha | She shines with the red brilliance of a thousand rising suns |
chaturbahu-samanvita | She is with four arms |
Raga-svarupa-pasadhya | Her right upper hand has the noose representing her love towards her devotees. ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே |
Krodhakarankhusojjvala = krodhakara ankusha ujvala | Her upper left hand has a goad to spurn her devotees towards right conduct. தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள் |
Manorupa iksu-kodanda | Her lower left hand has a sugar-cane bow which symbolizes the Sankalpa (power of desire) of the mind which creates the phenomenal universe. மனோரூப மனமாகிய கரும்புவில்லை உடையவள். மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்! |
Pancha-tanmatra-sayaka | Her lower right hand has an arrow symbolic of the five senses elements.– ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளாகக் கொண்டவள் |
Nijaruna-prabha-pura-majjad-brahmanda-mandala | Her red brilliance engulfs all the universe. தனது சிவந்த திருமேனியின் ஒளி வெள்ளத்தில் மூழ்கிய பெரிய அண்டங்களின் கூட்டத்தை உடையவள் |
Champakasoka-punnaga. Saugandhika-lasat-kacha | The blossoms Champaka, Asoka, Punnaga get their fragrance from her hair; லசத் = மின்னும்; கச = கேசம்; |
Kuruvinda-mani-sreni-kanat-kotira-mandita | Her crown has red rubies set in gold; ஸ்ரேணி -- சரம்; கனத் = பளபளக்கும்; கோடீர = உச்சி, மகுடம்; |
Ashtami-chandra-vibrahjaadalika-sthala-sobhita | Her forehead is shaped like the half moon on Astami day; அலிக = நெற்றி; |
Mukha-chandra-kalankabha-mrga-nabhi-visesaka | A tilak or a mark of musk adorns her face like the dark blemish on the full moon |
Vadana-smara-mangalya-grha-torana chillika | Her eyebrows are the triumphal arches to her face, beautiful as the bridal palace of cupid. Her face is like Manmathan's house, and Her eyebrows are the decorative arches to that house; Chillika means eyebrows |
Vaktra-laksmi-parivaha-chalan-minabha-lochana | In the ocean of her beauty her eyes move back and forth like fish; முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகளை கொண்டவள் ; வக்த்ர = முகம்; பரிவாஹ = நீர்நிலை; |
Navachampaka-pushpabha-nasa-danda-virajita | Her nose is like the newly blossomed champaka flower |
Tarakantitiraskari nasabharana-bhasura | The brilliance of the nose ornaments put the stars to shame |
Kadamba-manjari-klupta-karna-pura-manohara | The Kadamba flowers in her hair get their fragrance from her ears. சீராக மலர்ந்திருக்கும கதம்ப மலர்க்கொத்துகளால் காதுகளை அலங்கரித்திருப்பவள்; மஞ்சரி = கொத்து; க்லுப்த = சீராக அணிவகுத்து;கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து; கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும அணிகலன்; மனோஹர = ரம்யமாக; |
Tatanka-yugalibhuta-tapanodupa-mandala | Who has the Sun and the Moon as her ear ornaments. tapan - sun, udupa - moon; |
Padma-raga-sila-darsa-pari-bhavi-kapola-bhuh | Her cheeks are like red, smooth, ruby-colored mirrors. பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடியை விட பிரகாசிக்கும் கன்னங்களை உடையவள் |
Nava-vidrumabimba-sri-nyakkari-radanacchada | Her upper lip and her lower lip put to shame the newly formed coral and the red ivy gourd. vidruma means coral; Nyakkāra (न्यक्कार).—Humiliation; radana a tooth, and cchada covering; hence radanacchada means lip; |
Suddha-vidyankurakara-dwija-pankti-dvayojjvala | Her teeth shine as seeds of pure knowledge that appear as two rows of brahmins dressed in white, sitting and chanting vedas; dwija = teeth; |
Karpuravitika-moda-samakarsid-digantara | The paan(betel leaves) fragrance permeates the whole universe. எல்லாத் திசைகளிலும் நறுமணம் தரும் வாசனை திரவியங்களுடன் வெற்றிலையை மெல்லுகிறவள் |
இப்பொழுது எம். எஸ். ஷீலா குரலில் நாட்டை ராகத்தில் முதல் 20 வரிகளை கேட்போம்.
மேற்கண்ட வரிகளை சற்று நிதானப்படுத்தி கேட்டு கற்றுக்கொள்வோம்.
வரும் பதிவில் கௌளை ராகத்தில் அடுத்த 20 வரிகள்.