top of page

Learn Theeratha ViLaiyaatu PiLLai (Part 1)

Updated: Mar 20

தீராத விளையாட்டுப் பிள்ளை – பாரதியார் கவிதை


ராகம்: சிந்து பைரவி

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


தின்னப் பழங்கொண்டு தருவான் (கண்ணன்) பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என் நேயன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


Here is Ambika Kameshwar teaching the lines:




ராகம் : கமாஸ் அழகுள்ள மலர்கொண்டு வந்து என்னை அழஅழச் செய்த பின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” என்பான் என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)


ராகம்: ஷண்முகப்ரியா

பின்னலைப் பின்னின் றிழுப்பான் தலை பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான் வண்ணப் புதுச்சேலை தனிலே புழுதி வாரிச் சொரிந்து வருத்திக் குலைப்பான். (தீராத)






23 views1 comment

Recent Posts

See All
bottom of page